நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை

குடவாசல் அருகே நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே நிலத்தகராறு…

குடவாசல் அருகே நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஸ்கரின் மனைவி அலங்காரமேரி, மகன் அஜய்குமார் ஆகியோரை, அவரது அண்ணன் மகன் செபாஸ்டின் கடப்பாரையில் குத்திக் கொன்றதாக தெரிகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள செபாஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘மதுரை மாநகராட்சியில் வேலை நிறுத்தப் போராட்டம்; 6000 பேர் பங்கேற்பு’

கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவருடைய தம்பி ஸ்டீபன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.