ஈரோட்டில் மளிகைக் கடையைத் திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார்.
ஈரோடு – பூந்துறை சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி சரண்யா (28). இன்று காலையில் வழக்கம்போல கடைக்குச் சென்ற சரண்யா மளிகைக் கடையின் இரும்புக் கதவை திறக்க முயன்றுள்ளார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரண்யா உயிரிழந்தார். இப்பகுதியில் திங்கள்கிழமை மழையுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசியது. இதில், மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வட்ட காவல் துறையினர் சரண்யாவின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








