முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இது மக்களின் மிக முக்கிய போக்குவரத்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்வதற்காக  மின்சார ரயில், பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாலை 4.25 மணிக்கு முதலாவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரயிலை சங்கர் என்பவர் இயக்கினார். திடீரென ரயில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடைமேடையில் ஏறி கட்டிடத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தின் போது நடைமேடை அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

விபத்தில் ரயிலின் ஓட்டுநர் காயமடைந்ததோடு, இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும் நடைமேடையில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. ரயிலில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தற்போது பொதுமக்கள் அனுமத்திக்கப்படவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் வார நாட்களை விட சற்று குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விரைவில் இந்தியாவுக்கு வரும் ரூசோ பிரதர்ஸ் – தி கிரேமேன் அப்டேட்

Vel Prasanth

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு.

Halley Karthik