முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து – 8 பேர் உடல் கருகி பலி

செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில்  பயங்கர தீ விபத்து நேரிட்டது.  தீ  அதற்கு மேலே அமைந்துள்ள ஹோட்டலுக்கு பரவியதில் எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஷோரூம் முழுவதும் தீ பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த தீயானது வேகமாக பரவி ஷோரூமிற்கு மேலே அமைந்துள்ள ரூபி ஹோட்டலிலும் பற்றியுள்ளது. அப்போது அந்த ஹோட்டலில் 25 பேர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலுக்கு பரவிய  தீயினால் ஹோட்டல் அறைக்குள் இருந்தவர்களில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதுமட்டுமல்லாமல், ஷோரூமில் இருந்து வந்த புகை மூட்டத்தால், ஹோட்டல் ஷோரூமில் தங்கியிருந்த பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனர். அதில் மேலும் சிலர் தீயிலிருந்து தப்பிப்பதற்காக மாடியிலிந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 5 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைத்து பின்பு காயமடைந்தவர்களை உடனடியாக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், தீயணைப்பு துறை இயக்குனர்  சஞ்சய் குமார் ஜெயின் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு,  சென்று மீட்பு பணிகளை துரிதப்படுததினர்.  இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்று கூறிய ஸ்ரீனிவாஸ் யாதவ், தீக்காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல், விடுதியில் தங்கியிருப்பவர்கள் வேலைக்காக வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறிய அமைச்சர், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் வெடித்து சிதறியதில் தீ விபத்தானது நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்தில்  பலியான 8 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், தெலங்கானா அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

G SaravanaKumar

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஹிந்துஸ்தானி வே’

Gayathri Venkatesan

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: சிறப்பு எஸ்ஐ கைது

Web Editor