முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

டி-20 தொடர் ; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி-20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியம் பட்டத்தை வெல்ல தவறிய இந்திய அணி டி20 உலககோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும் மூன்றாவது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய வீரர்களின் பெயர்கள்;

ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய வீரர்களின் பெயர்கள் ;

ரோகித் ஷர்மா தலமையிலான இந்த அணியில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு; திமுக அமைப்புச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்

Arivazhagan Chinnasamy

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வானிலை மையம்!

பலம் இல்லாத பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Arivazhagan Chinnasamy