ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!

மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.  மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி…

மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன்
மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். 

மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில்
பெட்டியின் மீது ஏறி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர் (17) என்ற
சிறுவன் நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக மேலே
சென்று கொண்டிருந்த வயர் மீது கை பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி
வீசப்பட்டார். இதைத்தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் மாணவனை மீட்டு மதுரை அரசு
ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு 80% சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 25,000 வோல்ட் பாயும் மின் பாதையிலிருந்து ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயன்று பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மின் பாதையை நெருங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.