தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றும் வகையில் தேவையான எற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நேற்று சஞ்சீப் பானர்ஜி அமர்வு நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் கண்டம் தெரிவித்தது. மேலும் நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்கள் காதில் வாங்கவில்லை எனவும் சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்குக் காரணம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், தமிழகம் முழுவதும் வாக்கும் என்னும் மையங்களில் சானிடைசர்கள் தெழித்து முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் இதுகுறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதி மன்றம் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது தேர்தல் எண்ணிக்கைக்கு பின் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.