100 நாள் வேலைத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியமர்த்தக்கூடாது: தமிழ அரசு உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியமர்த்தக்கூடாது என்று தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனா பரவலைக்…

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியமர்த்தக்கூடாது என்று தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி, கர்நாடகாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இரவு ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு அமலில் இருக்கிறது. மேலும் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் இயங்காது என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகப் பார்க்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தில் 55 வயத்திற்கு மேற்பட்டவர்கள் பணியமர்த்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியைப் பின்பற்றிப் பணி நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் நலன் கருதியே தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.