சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி…

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை தோற்கடித்தார். உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன் மீதான குற்ற விவரங்களை தெரிவிக்காத உதயநிதியின் வேட்புமனுவை ஏற்றது தவறு என ரவியின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது, வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை திரும்ப பெற எம்.எல்.ரவி தரப்பு அனுமதி கோரியது. அதனைத்தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.