பாஜகவுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சில எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர்.
உத்தவ் தாக்கரே பதவி விலகியதைத் தொடர்ந்து, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, 16 எம்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே சபாநயகரை தகுதிநீக்கம் செய்ய கோரிய மனு நிலுவையில் இருக்கும் போது அவர் கூறிய தகுதிநீக்கம் செல்லாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று புது புது உத்தரவுகளை உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வு பிறப்பித்துள்ளது.
அதன்படி இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் அதற்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வர உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.








