முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு

முட்டை விலை இன்று ஒரே நாளில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.50 ல் இருந்து 25 காசுகள் உயர்த்தி ரூ.4.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக…

முட்டை விலை இன்று ஒரே நாளில் 25 காசுகள் உயர்ந்துள்ளது.

முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.50 ல் இருந்து 25 காசுகள் உயர்த்தி ரூ.4.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் நாளை காலை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மீன்கள் இனப்பெருக்கம் காலம் என்பதால் ஆழ்கடலில் விசை படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் மீன் உணவுக்கு மாற்றாக முட்டையின் நுகர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. முட்டையின் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் முட்டை விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.