சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டதால், பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி, வடிவுடையம்மன் கோவிலில் தீப தூப ஆராதனைகள் மேற்கொண்டு, சங்க நாதம் முழங்க அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்பு கோவில்கள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: