தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத…

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.

பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது என்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, உத்தரவை பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கட்டணம் செலுத்தாத யாரையும் வெளியில் நிற்கவைக்கவில்லை என்றும் அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என்றும் சான்றிதழ் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் சான்றிதழ்களை தந்த பிறகு அந்த பள்ளிகள் மீது புகார் ஏதும் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.