ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாநில மற்றும் சிபிஎஸ்இ பாடதிட்டங்களில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட பின்னர், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படியே பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.