எடப்பாடி பழனிசாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாளை நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை காண்பதற்கு நானும் ஆர்வமாக உள்ளேன். ஆனால் டிக்கெட்தான் கிடைக்கவில்லை, டிக்கெட் கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி அதை இரண்டு முறை திருப்பி அனுப்பியதை மக்களிடம் சொல்லாத கேவலமான ஆட்சி அதிமுக.
அண்மைச் செய்தி: ’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் – ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு
நீட் விவகாரத்தில் நாங்கள் மக்களிடம் தெளிவாக கூறுகிறோம். நாங்கள் என்ன செய்துள்ளோம் ஆளுநர் என்ன கூறியிருக்கிறார். அதை மீண்டும் டெல்லிக்கு அனுப்ப போகிறோம். ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராக போராட்டமோ நடந்தால் வந்து கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா? அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கட்டும். அதன் பின்னர் நான் பதில் கூறுகிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.







