முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தின் முதல் கூட்டம் ; பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை

ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தின் முதல் கூட்டம் தமிழ்நாடு டிஜிபி சைலைந்திர பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

” ஓய்வு பெற்ற காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டமான, “ஓய்வு பெற்ற காவலர் நலவாரியம்” அமைத்திட அரசாணையை 03.03.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், ஓய்வு காவல் கண்காணிப்பாளர் என்.தாமோதரன், ஓய்வு பெற்ற பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளி, அரசு பிரிநிதி  வைதேகி மற்றும் நிதி நிர்வாகி  சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஓய்வு பெற்ற காவலர் நலவாரியத்தின் முதல் கூட்டம் இன்று (21.03.2023)  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் டி.ஜி.பி  சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 60,000 ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்குழு தனது அறிக்கையினை தயாரித்து அளிப்பதற்கான காலவரையரை நிர்ணயிக்கப்பட்டது.”  என காவல்துறை தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு

Yuthi

இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்ச

Web Editor

3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

Web Editor