அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் என இரு தரப்பினராக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் சட்டமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி தரப்பிலான 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தனர். இது அரசியல் வட்டரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெறுவோம் என ஒருமுறை கூட கூறவில்லை.
எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ளது கருத்து வேறுபாடு தானே தவிர பிளவு இல்லை. அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் தொடர வேண்டும்.
ஒரு தலைமுறையை தாண்டி அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி என்பது எங்களுடைய உயிர்மூச்சு” என்று தெரிவித்தார்.







