முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்திய அலுவலர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வழங்கினர்.  அப்போது அங்கு கூடியிருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் -அமைச்சர் கே என் நேரு

EZHILARASAN D

ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை

EZHILARASAN D

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

EZHILARASAN D