வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டை வேதாந்த் நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே புவனேஸ்வரி பேட்டை மற்றும் வேதாந்த் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர், பந்தல் அமைத்து செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
—-சௌம்யா.மோ






