டி-20 உலகக் கோப்பையில் தொடக்க வீரர்கள் யார்? விராத் விளக்கம்

டி-20 உலகக் கோப்பை தொடரில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது யார் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். டி-20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த…

டி-20 உலகக் கோப்பை தொடரில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது யார் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

டி-20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, வரும் 24 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இங்கிலாந்து அணியுடன் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராத் கோலி, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதனால் டி-20 உலகக் கோப்பைத் தொடரிலும் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்று கேள்வி எழுந்தது.

இதுபற்றி கேட்டபோது, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள் என விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பற்றி அவர் கூறும்போது, ஐபிஎல் தொடரில் நிலைமை வேறு. இப்போது தொடக்க ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடுகிறார். அவரைத் தாண்டி முதல் வரிசைக்கு வேறு ஒருவரை யோசிக்க முடியாது. ரோகித் சர்மா உலகத்தரமான வீரர். அவர் தொடக்க வீரராக அபாரமாக ஆடி வருகிறார். நான் 3-ம் வரிசையில் களமிறங்கி ஆடுவேன்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.