கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவுக்கு காரணமே இல்லாமல் அனுமதி மறுத்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழ நடத்த அனுமதி வழங்கக்கோடி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்னீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், கிருஷ்ணகிரி சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவுக்கு காரணமின்றி அனுமதி மறுத்து ஓசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டட்துக்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், “கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலுயுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.







