பீகாரில் 5 ரயில் பெட்டிகள் இன்ஜினில் இருந்து திடீரென கழன்று விபத்தான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர்-நர்கட்டியாகஞ்ச் இடையே சத்யகிரகா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மஜ்ஹவுலியா ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் சென்று கொண்டிருக்கையில் ரயிலின் 5 பெட்டிகள் இன்ஜினில் இருந்து துண்டானது. உடனே ரயிலில் இருந்த பயணிகளுக்கு பயம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்துக்கு கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் உடனடியாக வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எதன் காரணமாக இன்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்றது குறித்து விசாரணைக்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு தன்குப்பா ரயில் நிலையத்துக்கு அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருக்கையில் 3 பெட்டிகள் கழன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது