முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மீண்டும் சூடு பிடிக்கும் தங்க மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை அதிரடி

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரானா கோல்டு மோசடி தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மொத்தமாக தங்க பிஸ்கெட்டுகளை கொள்முதல் செய்து பிரபல நகைகடைகளுக்கு சில்லறையாக விற்பனை செய்துவரும் நிறுவனமாகும். மெட்டல்ஸ் அன்ட் மினரல் டிரேடிங் என்ற மத்திய அரசு நிறுவனம் கடந்த 2009ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் தங்கம் இறக்குமதி செய்ய ஏகபோக உரிமையை பெற்று இருந்தது. இந்த மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து தங்கத்தை மொத்தமாக வாங்கும் சுரானா கார்ப்ரேஷன், அந்த தங்க பிஸ்கெட்டுகளை பல்வேறு வடிவங்களில், வளையல், மோதிரம், தங்க சங்கிலி என உருமாற்றி பிரபல நகை கடைகள் சில்லரை வியாபாரம் செய்ய கொடுக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைதான் பிரபல நகை கடைகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வியாபாரத்தில்தான் முறைகேடு நடந்துள்ளது. அதாவது, இந்த சுரானா நிறுவனத்தினர் மத்திய அரசின் மெட்டல்ஸ் அன்ட் மினரல் டிரேடிங் நிறுவன அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தங்கம் விலையில் பல்வேறு முறைகேடுகளை செய்து வந்துள்ளனர். அதாவது தங்கத்தினை விற்கும் நாளில் இருந்து சுரானா நிறுவனத்தின் கைக்கு தங்கம் சென்று சேரும் நாளில் தங்கம் விலை குறைந்து இருந்தால் , சுரானா நிறுவனத்தினரின் கைக்கு செல்லும் நாளில் என்ன விலை குறைந்து இருந்ததோ அதனைதான் சுரானா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தி வந்தது.

இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதற்கு மத்திய அரசு அதிகாரிகள் உடந்தை என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ கண்டு பிடித்து வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு தொடர்பாகதான் தற்போது நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் தெருவில் உள்ள கார் பைனான்ஸ் செய்து வரும் ரமேஸ் துகார் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எமும்பூர் ராஜாரத்தினம் மைதானம் அருகில் உள்ள ரமேஸ் துகாரின் பைனான்ஸ் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர்களது நிறுவனங்களில் சட்ட விரோதமாக சுரானா கோல்டு நிறுவனத்தினர் முதலீடு செய்து, பணபரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தற்போதைய சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. நாடு முமுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை தொடர்பாக அதிகார பூர்வமாக செய்தி அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரா.சுப்பிரமணியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தலிபானுடன் இந்திய அதிகாரிகள் திடீர் சந்திப்பு

G SaravanaKumar

ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய்

EZHILARASAN D

2 குழந்தைகளை கொன்ற தாயை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Web Editor