விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை, எளிய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள், என பல்வேறு மக்களுக்கானத் திட்டங்களைச் செயல்படுத்தியவர் அபிஜித் சென்.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்காக , நாற்பதாண்டுகள் முக்கிய பங்காற்றியவரும், கிராமப்புற பொருளாதாரம் குறித்த நாட்டின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பொருளாதார நிபுணர் அபிஜித் சென் நேற்று நள்ளிரவு காலமானார். 72 வயதான அவர் பொருளாதார நிபுணராக நாட்டிற்கு என்னென்ன பணிகளை மேற்கொண்டார் என்பதனைப் பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு புறம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை, மற்றொரு புறம் எளிய மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க அரசின் கருவூலத் திட்டத்தில் நிதி ஆதாரம் உள்ளது என்பதை நிரூபித்து, அதை செயல்படுத்த பாடுபட்டவர் அபிஜித் சென். கிழக்கிந்தியா வழங்கிய பொருளாதார மேதைகளில் அபிஜித் சென்னும் ஒருவர். இயற்பியலில் ஆனர்ஸ் படித்தாலும், தந்தை சமரைப்போல் பொருளாதார நிபுணராக காலம் இவரை உருவாக்கி விட்டது.
அபிஜித் சென் அன்றைய பீகாரில் , ஜாம்ஷெட்பூரில் 1950 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் சென், டெல்லியில் பள்ளி படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தின்,செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். முதுகலையிலும்,ஆராய்ச்சியிலும் ,பொருளாதாரம் பயின்றார். தனது பொருளாதார ஆய்வறிக்கைக்காக, இங்கிலாந்து நாட்டிலுள்ள ,கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார். பின்பு சசெக்ஸ், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் எசெக்ஸ் ல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் கற்பித்தார்.
பிறகு 1985 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இருவருடை மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். பொருளாதார நிபுணர்களான கிருஷ்ண பரத்வாஜ், பிரபாத் பட்நாயக், சி.பி. சந்திரசேகர், அமித் பாதுரி மற்றும் அபிஜித்தின் மனைவி ஜெயந்தி கோஷ் ஆகியோருடன் இணைந்து , இந்தியப் பொருளாதார ஆராய்ச்சி மையத்தை பல்கலைகழகத்தில் நிறுவினார்.
கற்பித்தலைத் தாண்டி , 1997 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முன்னணி அரசு, தேசிய ஜனநாயக கூட்டணிஅரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளில் முக்கிய ப்பொறுப்பை வகித்துள்ளார். நாற்பதாண்டுகளுக்கு மேலாக உலக வங்கி,ஐநா, போன்ற சர்வதேச அமைப்புகளிலும், மேற்கு வங்கம், திரிபுரா மாநில அரசு மற்றும் இந்திய அரசில் திட்டக்குழு போன்ற அமைப்புகளில் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர் அபிஜித் சென்.
அவற்றோடு விவசாயச் செலவுகள் மற்றும் விளை பொருட்கள் ஆணையத்தின் தலைவர்,பண்ணை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, தானியக் கொள்கை குறித்த உயர்மட்ட நிபுணர்களின் குழுவின் தலைவர், திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் நாடு முழுவதும் ,அனைத்து நுகர்வோருக்கும் அரிசி , கோதுமையை ,பொது விநியோக முறையில் வழங்க ஆலோசனையை வழங்கினார்2010 ல் – அபிஜித் சென்னுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அபிஜித் சென்னும், திட்டக்குழுவும் மறைந்தாலும், அக்குழுவும், அபிஜித்சென்னும் செய்த அரும் பணிகளை வரலாறும் நாட்டு மக்களும் என்றும் நினைவில் கொள்ளும்.