இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி – கத்தாருக்கு வருகை தந்த அமீரக அதிபர்!

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் கத்தாருக்கு வருகை தந்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது

இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து  இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த  தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்  பல்வேறு அரபு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் கத்தாருக்கு இன்று  பயணம் மேற்கொண்டுள்ளார். நட்பு ரீதியான இந்த பயனத்தில்  கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்த அவர், அமீரக நாடுகளின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.