அவசரகால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு, பிரேசில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடாக பிரேசில் உள்ளது. அங்கு 84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. சீனாவின் சினோவாக் பயோடெக் மற்றும், இங்கிலாந்தின் அஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.







