இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிஎஸ் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக 15 ஆண்டுகள் இருந்தவர் பிஎஸ் சந்திரசேகர். பெங்களூருவில் வசித்து வரும் சந்திரசேகர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள சந்திரசேகருக்கு 75 வயதாகிறது. இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சந்திரசேகர் 242 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.







