முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர்ச்சியாக குட்டிக்கரணம் அடித்து சாதனை படைத்த சிறுவன்!

9 வயது சிறுவன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தொடச்சியாக குட்டிக்கரணம் அடித்து ஆஸ்கர் உலக சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், சித்ரா தம்பதியினரின் மகன் 9 வயதான சந்தோஷ் . இவர் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சந்தோஷ் சிறுவயது முதலே சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். அதனை பயன்படுத்தி அவரது திறமைகளை வளர்க்க பெற்றோர் பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்துள்ளனர். அதிலும் குட்டிக்கரணம் அடிப்பதில் சிறுவன் கெட்டிக்காரர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை சாதனையாக நிகழ்த்த வேண்டும் என அந்த சிறுவனின் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் சந்தோஷ், தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து குட்டிக்கரணம் அடித்து அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்கர் உலக சாதனை கமிட்டியினர் இவரது சாதனையை பாராட்டி சந்தோஷிற்கு ஆஸ்கர் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் பட்டத்தை வழங்கி சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கினர். இந்த சிறுவனின் திறமையை கிராம மக்கள் கைதட்டி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’சித்திரம் பேசுதடி படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் அழுதேன்’ – நடிகர் நரேன்

EZHILARASAN D

டெல்லி பயண சர்ச்சை; இபிஎஸ்ஸை சந்தித்த ராஜேந்திரபாலாஜி

G SaravanaKumar

பவானிபூா் இடைத்தேர்தலில் மம்தா வெற்றி

Halley Karthik

Leave a Reply