ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி முத்துச்சாமி,  திருவண்ணாமலையில் ஏடிஎம் திருட்டு சம்பவத்துக்குப்பின், வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இரவு நேர ரோந்துப் பணிக்கு காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கவும்: அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு போட்டியாக களம் இறங்கும் இந்திய வம்சாவளி விவேக்!

மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியில் இருந்தனர். தற்போது காவலர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் சோதனைச் சாவடிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறினார்.மேலும், சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தும் பொருட்டு அங்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தவும், காவலாளிகளை நியமிக்கவும் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வேலூர் சரகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் தொடக்கமாக விபத்து நடக்கும் இடங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. எதனால் விபத்து நடந்தது, விபத்துக்கான காரணம், விபத்தைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சாலைகள் சீரமைப்பு குறித்து உரிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையை முற்றிலும் தவிர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.