ஈஸ்டர் திருநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ மக்களின் இறைநம்பிக்கை ஆகும். இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்டர் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கருணையே வடிவான இயேசு கிறிஸ்துவின் மனிதநேயக் கருத்தியல்களை வாழ்வியல் நெறிகளாகக் கொண்டு நடக்கும் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் வன்முறைகளும், வெறுப்பும், வறுமையும், கெட்ட போர்களும் அகன்று, மனிதம் மட்டுமே எங்கும் ஆட்சி செய்யும் புத்துலகைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.