அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு அருகே கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்…

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர நிலடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவை தலைகீழாய் புரட்டிப் போட்டது.

இதையும் படியுங்கள் : வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் – அமைச்சர் கே.என்.நேரு

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பெரிதளவிலான உயிர்ச்சேதங்கள் இல்லாதபோதிலும், பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்தியாவின் அசாம், மேகாலயா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், இன்று இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள நிகோபார் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9, 4.1, 5.3 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.