நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் – பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!

நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அஸ்ஸாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. 2025-ம் ஆண்டு தொடங்கிய 7வது நாளில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின்…

Earthquake measuring 7.1 on the Richter scale in Nepal - Bihar and Assam also affected!

நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அஸ்ஸாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

2025-ம் ஆண்டு தொடங்கிய 7வது நாளில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) படி, நிலநடுக்கம் இன்று காலை 6:35 மணிக்கு, நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பலப் பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பீகாரின் சிலப் பகுதிகளில் மக்கள் சாலையில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதுவரை சேதாரங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை.

பொதுவாகவே, நேபாளம் புவியியல் ரீதியாக வேகமாக இயங்கும் பகுதியாகும். இந்திய – யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் மோதியதால்தான் இமயமலையே உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.