மேற்கு சிக்கிமில் இன்று அதிகாலை சிக்கிம்-நேபாளப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்கு சிக்கிமின் சில பகுதிகளிலும், மாநிலத் தலைநகரான கேங்டாக் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
மேற்கு சிக்கிமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிக்கிம்-நேபாளப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள யுக்ஸோமிற்கு வடமேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் 73 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது மேற்கு சிக்கிமின் பல பகுதிகளிலும், மாநிலத் தலைநகர் கேங்டாக் உள்பட கிழக்கு சிக்கிமின் சில இடங்களிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.




