தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒருகிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.




