விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேபோல், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டத்தில் உள்ள சங்குபட்டி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துள்ளனர். திருவேங்கடம் அருகே உள்ள செல்லபட்டி, ஆவுடையாள்புரம், வையக்கவுண்டன்பட்டி, குண்டம்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாறை கிராமங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீதிக்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







