மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மணிப்பூர் மாநிலம், மொய்ராங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் காலை 10.02 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. மொய்ராங்கிற்கு தென்கிழக்கில் 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
-ம.பவித்ரா








