‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் முதன் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி இருந்தது. இதனிடையே இப்படத்தின் 2 ஆவது பாடல் குறித்த அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டிருந்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2 – வது பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். டேன்ஸ் நம்பரான் இப்பாடலுக்கு கென் கருணாஸ் வரிகள் எழுத்தியுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, வருகிற 23ந் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து புதிய பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் குரலில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.