அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆகவும் பதிவாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ, உயிரிழப்புகள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலஅதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
-ம.பவித்ரா








