அந்தமான் நிக்கோபாரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில், அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள் என்னென்ன?’
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
[INDIA] M5.0 Jul-04 10:04:17 UTC, 191km SE of Portblair, Andaman and Nicobar island, India, Depth:10.0km, https://t.co/PA4dOGuQuK #quake pic.twitter.com/6CrrrYkQeI
— Earthquakes (@earthquakesApp) July 4, 2022