மதுரையில் 8-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முக சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை கோ.புதூரில் உள்ள வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை படித்தவர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஐ.டி.ஐ, நர்சிங், தட்டச்சர், சுருக்கெழுத்தர், பிசியோதரபி படித்தவர்களும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலை தேடுபவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டையுடன் இம்முகாமில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு பதிவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








