முக்கியச் செய்திகள் குற்றம்

நூதன முறையில் திருட்டு; போலி சாமியார் கைது

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி 22 சவரன் நகைகளை அபகரித்த போலி பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்னி மடத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தன்னை சாமியார் போல காட்டிக்கொண்ட சுஜாதா, அந்த பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், அதனால், அவரது 2 மகள்களுக்கும் திருமணம் நடைபெறாது எனவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது தோஷத்தை போக்க வழி ஏதும் உள்ளதா என கேட்டுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜாதா, அந்தப் பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி அவ்வப்போது நகைகளை பெற்று வந்துள்ளார். பின்னர் பூஜை முடிந்து சுஜாதா. அந்த பெண்ணிடம் அவர் அளித்த நகைகளை திருப்பி அளித்துள்ளார். சில நாட்களில் அவர் திருப்பி கொடுத்த நகைகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்ததையடுத்து, அந்த பெண் போலீசில் சுஜாதா மீது புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சுஜாதாவை கைது செய்து அவரிடமிருந்த 22 சவரன் நகைகளை மீட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

திருப்பதி பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

Saravana Kumar

பத்தாண்டு காலமாக செய்யாததையா தற்போது அதிமுக செய்துவிடப்போகிறது: உதயநிதி ஸ்டாலின்!

Saravana Kumar

எழில் – பார்த்திபன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

Gayathri Venkatesan