முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது. அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை நாட்கள் விவரம்:

அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 3 – ஞாயிறு
அக்டோபர் 6 – மஹாளய அமாவாசை. அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தாவில் விடுமுறை
அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி. திரிபுரா, மேற்கு வங்கம், இம்பால் பகுதியில் வங்கிகள் விடுமுறை
அக்டோபர் 9 – இரண்டாவது சனிக்கிழமை
அக்டோபர் 10 – ஞாயிறு (வார விடுமுறை)
அக்டோபர் 12 – துர்கா பூஜை. அகர்தலா, கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 13 – துர்கா பூஜை, அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி பகுதிகளில் விடுமுறை

அக்டோபர் 14 – தசரா, மகா நவமி. அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் வங்கிகள் விடுமுறை.

அக்டோபர் 15 – விஜய தசமி. இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்களில் விடுமுறை
அக்டோபர் 16 – துர்கா பூஜை (சிக்கிம்-கேங்டாக் பகுதியில் விடுமுறை)
அக்டோபர் 17 – ஞாயிறு (வார விடுமுறை)
அக்டோபர் 18 – கதி பிஹு. (அசாமில் விடுமுறை)
அக்டோபர் 19 – மிலாடி நபி-

அக்டோபர் 20 – வால்மீகி பிறந்த நாள். அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா பகுதிகளில் விடுமுறை.
அக்டோபர் 22 – மிலாடி நபி. ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் விடுமுறை
அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை
அக்டோபர் 24 – ஞாயிறு (வாரவிடுமுறை)
அக்டோபர் 26 – சேர்க்கை நாள் ஜம்மு, ஸ்ரீநகரில் விடுமுறை
அக்டோபர் 31 – ஞாயிறு (வார விடுமுறை)

Advertisement:
SHARE

Related posts

ஒரு மணி நேரம் தோகை விரித்தாடிய மயில்

Saravana Kumar

பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி

Gayathri Venkatesan

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவு

Vandhana