மிரட்டிய டு ப்ளிசிஸ்; கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு

துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 192 ரன்களை குவித்துள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று…

துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 192 ரன்களை குவித்துள்ளது.

துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த கொல்கத்தா பந்து வீச்சில் மிரட்டியது.

சென்னையை பொறுத்த அளவில், முதலில் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் டு ப்ளிசிஸ் அதிரடியாக ஆடினர். ருதுராஜ் 27 பந்துகளில் 3 பவுண்ட்ரி மற்றும் 1 சிக்சர் என மொத்தம் 32 ரன்களை குவித்து சுனில் நரைன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் டு ப்ளிசிஸ் பொறுமையாக ஆடினார். ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரில் டு ப்ளிசிஸ் 2 பவுண்ரி என மொத்தமாக 7 பவுண்ட்ரியும், 3 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். மட்டுமல்லாது டு ப்ளிசிஸ்க்கு இது 100வது ஐபிஎல் போட்டியாகும். இதில் 59 பந்துகளில் 86 ரன்களை எடுத்து 20வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

உத்தப்பாவை பொறுத்த அளவில் தனது 7,000 ரன்களை நோக்கி முன்னேற தொடங்கினார். இந்த போட்டியில் 55 ரன்களை எடுத்தால் டி20 போட்டிகளில் 7,000 ரன்களை குவித்த சாதனையை பெறுவார். ஆனால், நரைனின் 13வது ஓவரில் தொடக்கத்தில் தனது 3வது சிக்ஸரை விளாசிய உத்தப்பா அதே ஓவரில் 3வது பந்தில் எல்பிடபள்யு (OUT) ஆனார். மொத்தமாக 15 பந்துகளில் 35 ரன்களை குவித்து வெளியேறினார் உத்தப்பா.

பவுலிங்கை பொறுத்த அளவில், நரைன் 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 26 ரன்களை கொடுத்துள்ளார். கடைசி ஓவர் வீசிய மாவி அதிரடியாக தனது பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் வீசிய 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை எடுத்துள்ளார். கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் ரன் பட்டியல்

  • ருதுராஜ் -27 பந்துகளில் 32 ரன்கள்
  • உத்தப்பா -15 பந்துகளில் 31 ரன்கள்
  • டு ப்ளிசிஸ் – 59 பந்துகளில் 89 ரன்கள்
  • மொயின் அலி -20 பந்துகளில் 37 ரன்கள் (நாட் அவுட்)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.