சத்தீஸ்கரில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கூட்டத்தின் நடுவே கார் புகுந்த சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி பண்டிகை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக துர்கா பொம்மையை அழிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் வேகமாக வந்த கார் பொதுமக்கள் இருந்த கூட்டத்தில் புகுந்து நிற்காமல் சென்றது.
இதில், பலர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிவந்த 2 இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற பண்டிகை நாட்களில் சத்தீஸ்கர் அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.







