முக்கியச் செய்திகள் தமிழகம்

டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக டிச.17 மற்றும் 18ம் தேதிகளில், தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிச.19ஆம் தேதியை பொறுத்த அளவில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிச.20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: டிச17 முதல் 20ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும்.

இதன் காரணமாக டிச17ஆம் தேதி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.18 மற்றும் 19ஆம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.20ஆம் தேதியை பொறுத்த அளவில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in

Advertisement:
SHARE

Related posts

“தலைவி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும்”

Halley Karthik

பட விழாவில் காதலை சொன்ன ’வலிமை’ வில்லன்

Halley Karthik

உச்சபட்ச தயார் நிலையில் முப்படைகள்: பிபின் ராவத் தகவல்!

Jayapriya