திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சளால் ஆன மாலையை அபிஷேகத்திற்கு வழங்கினார்.
திருப்பதியில் பிரமோற்சவ நாட்களில் ஏழுமலையான கோயிலில் அபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்க தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர் மலர்கள் ஆகியவற்றால் மாலைகளை திருப்பூர் சேர்ந்த பக்தர் ராஜேந்திரன் கொடுத்துள்ளார்.
இவற்றை நேற்று தேவஸ்தான தோட்டத்துறையினர் திருப்பதி மலையிலுள்ள தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து எடுத்து ஏழுமலையான் கோயிலில் சமர்ப்பித்தனர். இதனை தேவஸ்தான அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்தின் போது பயன்படுத்தினர்.
அனகா காளமேகன்







