திரையரங்கத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பொதுமக்களே விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள திரையரங்கத்தில் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் திரையரங்கத்தின் உள்ளே மது அருந்திவிட்டு திரைக்கு முன்பு சென்று சட்டையை கழற்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமாறு தகராறில் ஈடுபட்டனர்.
சினிமா பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் அந்த நபர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அனைவரையும் ஆபாசமாக வார்தையால் திட்டியதால் கோபமடைந்த பொதுமக்கள் ஏழு பேர் கொண்ட கும்பலை தர்மடி கொடுத்து திரையரங்கத்தின் வெளியே விரட்டி அடித்தனர்.
இதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் திரையரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்







