விருதுநகரில் மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கினர்.
விருதுநகர், நான்கு வழிச்சாலையில் சூலக்கரை உதவி ஆய்வாளர் அஜித் குமார் தலைமையில் வாகன சோதைனையில் ஈடுபட்டடிருந்தனர். அப்போது அரசு பேருந்து நிலை தடுமாறி வந்ததை பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து, அவரிடம் விசாரனை நடத்தியதில் அவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியதை ஒப்புக்கொண்டார். பின்னர் உடனடியாக பயணிகளுக்கு மாற்று ஓட்டுநர் ஏற்பாடு செய்யப்பட்டு, பேருந்து இயக்கப்பட்டது.
குடிபோதையில் இருந்த ஓட்டுனரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோதனை செய்த போது குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநருக்கு ரூ1000 அபராத கட்டணம் விதிக்கப்பட்டது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழகத்திற்கு சூலக்கரை காவல்துறையினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் போக்குவரத்து நிர்வாகம் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்தனர்.
அனகா காளமேகன்







