மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்! கூலாக வலம் வந்த பாம்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பழையகாலணி பகுதியில் ஊராட்சி நிர்வாக கிணறு ஒன்று உள்ளது. இதில்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பழையகாலணி பகுதியில் ஊராட்சி நிர்வாக
கிணறு ஒன்று உள்ளது. இதில் மீன்கள் அதிக அளவில் இருந்த நிலையில் இன்று திடீரென கிணற்றில் இருந்த மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிரோடு இருந்த மீன்களும் மயங்கி மயங்கி சிறிது நேரத்தில் இறந்து கொண்டே இருந்தது. அந்த மீன்கள் இறந்து கிடப்பதற்கு மேல் பாம்பு ஒன்று ஹாயாக உலா வந்து கொண்டிருக்கின்றது.

மர்மமான முறையில் மீன்கள் இறப்பதற்கான காரணத்தை கண்டறியவும், நீர்நிலையினை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு பொதுமக்களின் நலனினை கவனத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.