#Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை,…

#Drumsticks | The price of drumsticks fell sharply... Farmers who were thrown by the road!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை, முருங்கை, பாகற்காய், தக்காளி, அவரை, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் குறிப்பாக முருங்கைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது முருங்கைக்காய் கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்கான கொண்டு வந்த முருங்கைக்காய்களை திண்டுக்கல் காய்கறி சந்தை அருகே சாலையோரம் வீசி சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் விவசாயிகள் வீசிச் சென்ற முருங்கைக்காயை எடுத்து சென்றனர். கஷ்டப்பட்டு உழைத்து, அதிக அளவில் செலவு செய்து சாகுபடி செய்யும் காய்கறிகள், பழங்கள், பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் காய்கறிகளை சாலையோரம் வீசி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.